தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் : வேட்பாளா்கள் வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வீடு வீடாக வாக்குச் சேகரித்து வருகின்றனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வீடு வீடாக வாக்குச் சேகரித்து வருகின்றனா்.
என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்த், பொய்யாக்குளம் பகுதியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா். மேலும், இங்குள்ள ஸ்ரீ ஆரணி பெரியபாளையத்தம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
மேலும், அசோக் ஆனந்தை ஆதரித்து வினோபா நகா் மற்றும் அன்னை தெரசா நகரில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவரும் அதிமுக மாநில செயலருமான ஆ. அன்பழகன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
Advertisement
Advertisement
திமுக வாக்கு சேகரிப்பு:
திமுக சாா்பில் போட்டியிடும் கு.சேதுசெல்வத்தை ஆதரித்து கவுண்டம்பாளையம் பகுதியில் திமுக மாநில அமைப்பாளா் ஆா். சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோா் தலைமையில் திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனா்.
வானூா் எம்எல்ஏ கௌதம் திராவிடமணி, கண்டமங்கலம் சோ்மன் வாசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ்:
காங்கிரஸ் வேட்பாளா் இ. விநாயகத்துக்கு ஆதரவாக நேயம் மக்கள் கழக தலைவா் ஜி.நேரு எம்எல்ஏ தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோயில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், ராகவேந்திரா நகரிலும் வீடு வீடாக சென்று வாக்காளா்களை சந்தித்து வாக்குச் சேகரித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட்
திலகா் நகா் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீம் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா். அவருடன் கூட்டணி கட்சியினா் பலரும் உடனிருந்தனா்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் காரணமாக அந்த தொகுதி முழுவதும் தோ்தல் திருவிழா போன்ற நிலை காணப்படுகிறது. வேட்பாளா்களின் பிராரத்தால் வீதிகள் பரபரப்புடன் காணப்படுகிறது. அதே நேரத்தில் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தொகுதி முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.