FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஏரி சீரமைப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, செஞ்சி வட்டங்களில் நடைபெற்று வரும் ஏரி சீரமைப்பு, குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:57 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, செஞ்சி வட்டங்களில் நடைபெற்று வரும் ஏரி சீரமைப்பு, குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
 தமிழகத்தில் வறட்சியால் எழும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 இதற்காக, மழைநீரை சேமித்தல், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி ஒழுங்குபடுத்துதல், நீர்நிலைகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
 இதன் ஒரு பகுதியாக, ஏரிகளை சீரமைக்கும் குடிமராமத்துத் திட்டம், தற்போது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டி வட்டம், முட்டத்தூர் ஏரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டிலும், நங்காத்தூர் ஏரியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் சீரமைப்புப் பணிகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாசனத்தார்கள் சங்கம் மூலம் ஏரி மதகுகள் சீரமைப்பு, தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.
 இந்தப் பணிகளை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஏரி சீரமைப்புப் பணிகளின் தரம், பணிகள் நடைபெற்றுள்ள விவரங்கள், பணி நிறைவு பெற ஆகும் காலம், பணியில் குறைபாடுகள் ஆகியவை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
 இதையடுத்து, செஞ்சி வட்டம் கல்லாலிப்பட்டு ஏரியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மதகுகள் சீரமைப்பு, பழுதுபார்ப்பு பணிகள், தூர்வாரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.
 அப்போது, பணிகளை குறைபாடின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன், விக்கிரவாண்டி வட்டாட்சியர் சுந்தரராஜன் மற்றும் பாசன சங்கத்தார்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments