விழுப்புரத்தில் திமுகவினர் அமைதி ஊர்வலம்
கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரத்தில் திமுக, தோழமைக் கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர் .
கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரத்தில் திமுக, தோழமைக் கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர் .
விழுப்புரம் காந்தி சிலை திமுக நகர கட்சி அலுவலகத்திலிருந்து மாலை ஊர்வலம் தொடங்கியது. திமுக நகரச் செயலர் இரா.சக்கரை தலைமை வகித்தார். திமுக நிர்வாகிகள் கற்பகமூர்த்தி, சோமு, காங்கிரஸ் நகரத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலர் தயானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், நகரச் செயலர் குப்புசாமி, ஏஐடியுசி செல்வம், மனித நேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன் உள்ளிட்ட தோழமைக் கட்சியினரும், திமுகவினர் பலரும் கலந்துகொண்டனர்.
அவர்கள், கருணாநிதியின் உருவப்படத்துடன் நேருஜி சாலை, திருச்சி சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நிறைவு செய்தனர். இதையடுத்து, அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலர் சக்கரை மற்றும் தோழமை கட்சியினர் இரங்கல் தெரிவித்துப் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.