கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
விழுப்புரத்தில் கஞ்சா விற்றதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் கஞ்சா விற்றதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் நகர காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, கே.கே. சாலை முருகன் கோவில் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் பழைய சிந்தாமணி பாதையைச் சேர்ந்த தனபால் மனைவி கலையரசி(58), கே.கே.சாலையைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கார்த்திகேயன்(34) என்பதும், கலையரசியிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி கார்த்திகேயன் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, தாலுகா உதவி காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி தலைமையிலான போலீஸார், விழுப்புரம் தென்னமாதேவி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்த வெங்கடேசன் மனைவி யுவராணி(33) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.