FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வளர்ச்சித் திட்டப் பணிகள்: அரசு முதன்மைச் செயலர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வானூர் வட்டம், கொந்தமூர் ஊராட்சியில் அணைக்கட்டு, தேர்குணம் ஊராட்சியில் பொதுப் பணித் துறை மற்றும் பாசனதாரர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து,  விழுப்புரம் அருகே சோழகனூர் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை மூலம் சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தின்கீழ் பசுமைக் குடிலில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா, பப்பாளி மரங்கள் மற்றும் மல்லிகை செடிகளைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கரடிப்பாக்கம் முதல் ஏனாதிமங்கலம் வரை அமைக்கப்பட்டு வரும் தார் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்தப் பணிகளை தரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.  கரடிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மகளிர் சுகாதார வளாகம்,  அங்கன்வாடிமையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
 பசுமை வீடு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள சூரிய சக்தி மின் இணைப்புடன் கூடிய வீடுகளையும்,  தனிநபர் இல்லக் கழிப்பறை திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, விழுப்புரம் சட்டக் கல்லூரி,  மகளிர் கல்லூரியின் புதிய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டவர், பணிகளை  விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினார்.  இதையடுத்து, மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், அரசு திட்டப் பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும்.  பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
 இந்த  நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்,  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, திண்டிவனம் சார்-ஆட்சியர் மெர்சி ரம்யா, திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ,  திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன்,  உதவி இயக்குநர் சீனிவாசன்,  கோட்டாட்சியர் சரஸ்வதி,  வட்டாட்சியர்கள் ஜோதிவேல்,  சையத்மெஹமூத் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments