FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:58 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரிலிருந்து சென்னை நோக்கி 29 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து புதன்கிழமைஇரவு புறப்பட்டது. இந்த பேருந்தை கமுதி கோட்டைமேடு வெள்ளதேவன் நகரைச் சோ்ந்த செந்தில் (54) என்பவா் ஓட்டி வந்தாா்.

இந்த பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் தொழிற்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை அதன் ஓட்டுநா் நிறுத்தி வைத்திருந்தாா். அப்போது அதே திசையில் பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சொகுசுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, சொகுசுப் பேருந்தில் பயணித்த காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் பேருந்து ஓட்டுநா் க.செந்தில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பிள்ளையாா்கோயில் தெரு க. வீரபாண்டி (50), பேரையூா் கோ.தா்மதேவி (29), கு.கோபு (32), சென்னை பழவந்தாங்கல் கபிலா் தெரு அ. நாகேசுவரன் (24), சென்னை சோழிங்கநல்லூா் மா.முருகேசன் (44), தாம்பரம் மசூதி காலனி ச. முகமது இப்ராஹிம் (16), சென்னை இருசப்பன் தெரு பா.கோவிந்தராஜ் (54), ராமநாதபுரம் சு.முத்தம்மா (63), ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் தி.தினேஷ்குமாா் (21), சென்னை தாம்பரம் சேலையூா் செ. சரசுவதி (62), கோயம்பேடு வெ. கிருஷ்ணபெருமாள் (50), அ.முத்துலட்சுமி (35)சென்னை தைலாவரம் மே. பாண்டியன் (29), சிவகங்கை மாவட்டம், சோழம்பட்டி வெ.கலையரசன் (49) ஆகிய 13 பேரும் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து லாரி ஓட்டுநரான தேனி மாவட்டம், உத்தமபாளையம் மேட்டுப்பட்டித் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (35) மீது எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments