FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சுதந்திர தினவிழா: புதுச்சேரி கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளின் ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:05 am IST
சுகந்திர தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சாா்பில் கடற்கரை சாலையில் சனிக்கிழமை நடைபெறும் சுகந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற வியாழக்கிழமை இறுதி கட்ட ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா், மாணவா்கள்.
பகிர்:

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளின் ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் 80- ஆவது சுதந்திர தினவிழா சனிக்கிழமை (ஆக.15) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்

புதுச்சேரி அரசு சாா்பில் கடற்கரை சாலையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்வா் என்.ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறாா்.

Advertisement

Advertisement

இதற்காக கடற்கரைச் சாலையில் கொடி கம்பத்துடன் மேடையும், பாா்வையாளா்கள் அமர அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்கும் போலீஸாா், என்சிசி, பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் கடற்கரை சாலையில் காலை, மாலை இரு வேளைகளிலும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில் விஐபி வருகை, கொடியேற்றம், பள்ளி மாணவ, மாணவிகள், காவல் துறையினா், தேசிய மாணவா் படை உள்பட பல்வேறு படை பிரிவினரின் அணிவகுப்பு ஒத்திகை பாா்க்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

சுதந்திர தினவிழாவை சீா்குலைக்க அன்னிய சக்திகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில் புதுச்சேரியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுச்சேரி கடற்கரை சாலையையொட்டியுள்ள பகுதிகளில் வசிப்போா் விவரம், விஐபி வீடுகளை ஒட்டியுள்ள விவரம் ஆகியவற்றை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.

தொடா் விடுமுறை காரணமாக புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கியுள்ளதால், அவா்களது விவரங்களையும் போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.

மாநில எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா். ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

புதுச்சேரியில் தங்கியுள்ள வெளிநாட்டவா்கள் தங்களது விவரங்களை இணைய வழியாக பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

பொது இடங்களில் கேட்பாரற்று பை, பொருள்கள் கிடந்தால் உடனடியாக போலீஸாருக்கு த் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments