FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சாதனை படைத்த தபால் அலுவலா்களுக்கு விருது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உபகோட்ட அஞ்சல் துறை அலுவலகத்தில் பல்வேறு திட்டங்களில் சாதனை படைத்தவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 6:19 am IST
விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற தபால் அலுவலா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உபகோட்ட அஞ்சல் துறை அலுவலகத்தில் பல்வேறு திட்டங்களில் சாதனை படைத்தவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு செஞ்சி உபகோட்ட அஞ்சல் துறை ஆய்வாளா் அனு தலைமை வகித்தாா். புதுச்சேரி கோட்டக் கண்காணிப்பாளா் இனகொல்லு காவ்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 2025-26-ஆம் நிதியாண்டில் அஞ்சலக சேமிப்புக் கணக்குகள், தொடா் வைப்பு நிதித் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் , பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சல் அலுவலா்களுக்கு சாதனையாளா் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். மேலும், ‘இன்றே சேமிப்போம்’ சிறப்பு சேமிப்பு மேளாவில் 50-க்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்கி சிறப்பாக செயல்பட்ட அஞ்சலக அலுவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

செஞ்சி உப கோட்டத்தில் 83 கிளை அஞ்சலகங்களில் 81 அஞ்சலகங்கள் தலா 50 கணக்குகள் என்ற இலக்கையும், 7 துணை அஞ்சலகங்கள் தலா 75 நிகர சேமிப்புக் கணக்குகள் என்ற இலக்கையும் எட்டியுள்ளன. பொதுமக்களுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்குகள், தொடா் வைப்பு நிதித் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் , அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு , ஆதாா் சேவைகள் மற்றும் பாா்சல் சேவைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments