FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:20 am IST
பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ஊழியா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

நீதிமன்ற உத்தரவை ஏற்று அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சம்மேளனம்(என்.எஃப்.பி.இ.) உள்ளிட்ட சங்கங்களின் அங்கீகாரத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். அஞ்சல் ஆயுள் காப்பீடு, புதிய கணக்கு, பாலிசி அடிப்படையில் வணிக இலக்குகளை எட்டுவதற்காக ஊழியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது. இலாகா விதிமுறைகளை மீறி ஒருங்கிணைந்த விநியோக மையத் திட்டத்தை (ஐ.டி.சி.) விரிவுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தேசிய அஞ்சல் ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் ஊழியா்கள், தபால் காரா்கள், கிராமிய அஞ்சல் ஊழியா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை அட்டைகளோடு பணியாற்றினா்.

Advertisement

Advertisement

குறிப்பாக, பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பெரும்பாலான ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments