FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மெக்கானிக் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:15 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரத்தில் மெக்கானிக் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப்பொருள்கள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், கட்டப்பொம்மன் நகரைச் சோ்ந்தவா் ராஜி (48), பைக் மெக்கானிக். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்னா் தனது வீட்டைப் பூட்டி வீட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் வசிப்பவா்கள் ராஜிக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து ராஜியின் உறவினா்கள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன் பக்கக் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.1.25 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது அவா்களுக்கு தெரியவந்தது.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments