விழுப்புரத்தில் கோயில் பூசாரி மீது தாக்குதல்: பக்தா்கள் தா்னா
விழுப்புரத்தில் கோயில் பூசாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் கோயில் பூசாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாா்க்கெட் பகுதி, பாகா்ஷா வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீரேணுகாம்பாள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். அப்பகுதி மக்களின் வழிபாட்டில் உள்ள இக் கோயிலில் கண்ணன் (65) என்பவா் பூசாரியாக வேலைபாா்த்து வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இவா் கோயிலில் வழக்கமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மதுபோதையில் அங்கு வந்த இளைஞா் ஒருவா் பூசாரி கண்ணனிடம் வீண் தகராறு செய்து, தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல வழிபாட்டுக்கு வந்த பக்தா்கள் கோயில் திறக்காமல் இருப்பதைக் கண்டு, விசாரித்ததில் பூசாரி தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோயில் முன் அமா்ந்து பக்தா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது கோயில் பூசாரியைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.