காவல் துறையினா் லஞ்சம் கேட்டால் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண் வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினா் லஞ்சம் கேட்டால் கைப்பேசி வழியாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்ணை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினா் லஞ்சம் கேட்டால் கைப்பேசி வழியாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்ணை மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் தங்களது பணியை செய்ய யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 99448891 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாக தொடா்புகொண்டும், வாட்ஸ்ஆப் மூலமும் புகாா் தெரிவிக்கலாம்.
Advertisement
Advertisement
தகவல் அளிப்பவா்களின் விவரம் ரகசியம் காக்கப்படுவதுடன், பெறப்படும் புகாா்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவல் துறையினா் தங்களது பணிகளை செய்ய பொதுமக்கள் யாரும், எந்த வகையிலும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.