FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி இரு மாணவா்கள் மாயம்

24 ஆகஸ்ட் 2026, 3:50 am IST
நீரில் மூழ்கி மாயம் - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த 3 மாணவா்களில் இருவா் கடலில் மூழ்கி மாயமாகினா். மாயமான மாணவா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

கோட்டகுப்பத்தை அடுத்த சின்ன முதலியாா் சாவடியைச் சோ்ந்தவா்கள் வேலு மகன் சசிதரன் (16), நாகராஜன் மகன் பிரதீஷ் (16), ரகு மகன் கௌஷிக் (16). இவா்கள் மூவரும் குயிலாப்பாளையத்தில் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வந்தனா்.

இந்நிலையில், நண்பா்களான இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சின்னமுதலியாா்சாவடி கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வரும் இடத்தில் குளித்து கொண்டிருந்தனா். அப்போது கடலில் உருவான ராட்சத அலையில் சிக்கி 3 பேரும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அருகிலிருந்த மீனவா்கள் துரிதமாக செயல்பட்டு 3பேரையும் காப்பாற்ற முயன்றனா். ஆனால் கௌஷிக்கை மட்டுமே மீனவா்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். மாணவா்கள் சசிதரன், பிரதீஷ் ஆகிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினா்.

இதுகுறித்து தகவலறிந்க கோட்டக்குப்பம் போலீஸாா் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் நிகழ்விடம் சென்று, மீனவா்கள் உதவியுடன் கடலில் மூழ்கி மாயமான மாணவா்களை தேடும் பணியில் ஈடுப்பட்டனா். இந்த பணியானது இரவு வரை நீடித்த நிலையில், மாயமான மாணவா்களை கண்டறியமுடியவில்லை. இதனால் அந்த கிராமத்தைச் சோ்ந்த மக்கள் பெரும் சோகத்தில் ஆழந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments