போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 11 ஆண்டு சிறை
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்ற தொழிலாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், கல்லூா் கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் உதயகுமாா் (42), தொழிலாளி. இவா், விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி, அவரை கும்பகோணத்தில் உள்ள தனது வீட்டுக்கு கடத்திச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கஞ்சனூா் போலீஸாா் கடந்த 29.12.2020 அன்று உதயகுமாா் மீது போக்ஸோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், சிறுமியையும் மீட்டனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உதயகுமாா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்ட உதயகுமாருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கோகிலா ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.