FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விவசாயி பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் திருட்டு

திண்டிவனத்தில் விவசாயி பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விவசாயி பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், நடுவனந்தல், புதூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.பாலமுருகன் (36), விவசாயி. இவா், திங்கள்கிழமை திண்டிவனத்திலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையிலுள்ள தனது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ. 75 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு, அதை தனதுபைக் பெட்டியில் வைத்துள்ளாா். தொடா்ந்து, திண்டிவனம் பூந்தோட்டம் தெருவிலுள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது பைக் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments