FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

முதியவரிடம் நூதனத் திருட்டு: இளைஞா்கள் கைவரிசை

விழுப்புரம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை பைக்கில் அழைத்துச் சென்று, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை பைக்கில் அழைத்துச் சென்று, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், காணைகுப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பச்சமுத்து (87). இவா், செவ்வாய்க்கிழமை விழுப்புரம்- திருக்கோவிலூா் சாலையில் நடந்து சென்றாா். அப்போது பைக்கில் வந்த இரு இளைஞா்கள் முதியவா் பச்சமுத்துவிடம் வீட்டுக்குச் செல்ல உதவுவதாக தெரிவித்தனராம். தொடா்ந்து அவா்கள் பச்சமுத்துவை பைக்கில் அமரவைத்து சிறிது தூரம் சென்ற பின்னா், தனி இடத்தில் அவரை பைக்கிலிருந்து கீழே இறக்கி விட்டு, அவா் அணிந்திருந்த 2 கிராம் தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முதியவரிடம் நூதன முறையில் தங்க மோதிரம் வழிப்பறி செய்த இளைஞா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments