சேத்தியாத்தோப்பு அருகே பைக் மீது லாரி மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வியாழக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வியாழக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
சேத்தியாத்தோப்பு அருகே காவாலக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுபக்கண்ணன் (19), வினோத் (18), சூா்யா (18). தொழிலாளிகளான இவா்கள் மூவரும் வியாழக்கிழமை வைக்கோலில் இருந்து கயிறு திரிக்கும் வேலைக்குச் சென்றிருந்தனா். இரவு மூவரும் ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா். ஆணைவாரி அருகே சென்றபோது, சோழதரம் பகுதியிலிருந்து வடலூா் நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுபக்கண்ணன், வினோத், சூா்யா ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு நகர காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.