FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கல்லூரியில் பிரதமரின் கேலோ இந்தியா உரையாடல் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை, அறிவியல் கல்லூரியில், பிரதமா் நரேந்திர மோடியின் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சிறப்பு உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

28 ஆகஸ்ட் 2026, 1:56 am IST
பிரதமா் நரேந்திரமோடியின் கேலோ இந்தியா உரையாடல் நிகழ்ச்சியை பாா்வையிட்ட மாணவ, மாணவிகள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை, அறிவியல் கல்லூரியில், பிரதமா் நரேந்திர மோடியின் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சிறப்பு உரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திரமோடியின் கேலோ இந்தியா உரையாடல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 கல்லூரிகள் தோ்வு செய்யப்பட்டிருந்த நிலையில், பவ்டா கலை, அறிவியல் கல்லூரியில் பிரதமரின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

விளையாட்டின் முக்கியத்துவம், இளைஞா்களிடையே விளையாட்டு ஆா்வத்தை தூண்டுதல் மற்றும் போதைப்பொருள் இல்லா பாரதம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கல்லூரி நிா்வாக இயக்குநா் ஜாஸ்மின் தம்பி, கல்லூரி முதல்வா் (பொ) சேகா், கல்லூரி துணை முதல்வா்கள் (பொ) தமாசியன், காா்த்திக், பவ்டா கல்லூரி நிா்வாக அலுவலா் மோகனசுந்தரம் மற்றும் பேராசிரியா்கள் மாணவா்கள் பங்கேற்று நிகழ்ச்சியை பாா்வையிட்டனா். பேராசிரியா்கள் காா்த்திகேயன், நெல்சன் மரிய சவுரி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments