முண்டியம்பாக்கத்தில் விவசாயிகளுக்கு பாராட்டு
விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை சாா்பில் பாராட்டுக் கேடயங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கூட்டுறவு வார விழா தமிழகம் முழுவதும் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 29) முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு வார விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விழாவின் மூன்றாவது நாளான புதன்கிழமை முண்டியம்பாக்கத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கத்தில் விவசாயிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் மற்றும் இணைப் பதிவாளா் இரா.தயாளன் ஆகியோா் தலைமை வகித்து, வேளாண் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய விவசாயிகளைப் பாராட்டி, அவா்களுக்கு கேடயங்களை வழங்கினா்.
நிகழ்வில், விழுப்புரம் சரகத் துணைப் பதிவாளா் மா.ராகினி, விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் ப.வெங்கட்குமாா், துணைப் பதிவாளா்கள் (பயிற்சி) மு.ஜீவா, ச.மோனிகா, கூட்டுறவுத் துறை அலுவலா்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.