FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

Updated On : 27 ஜூலை 2026, 2:18 am IST
தற்கொலை
பகிர்:

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், ராயபுதுப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா. ராஜா (47), தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ஜூலை 21-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜாவை, அவரின் மனைவி தமிழ் இலக்கியா கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த ராஜா வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ராஜா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments