பொறியியல் பணிகள்: ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் மாா்க்கமாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம் மாா்க்கமாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம், தாமதமாக இயக்கம் ஆகிய நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.
Advertisement
Advertisement
பகுதியளவில் ரத்து: திருப்பதியிலிருந்து காலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் (வண்டி எண் 16111), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப்புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.
புறப்படும் இடம் மாற்றம்: புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட வேண்டிய புதுச்சேரி-சென்னை எழும்பூா் பயணிகள் ரயில் (வண்டி எண் 66052), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் புதுச்சேரி- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் புறப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல்1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
இடைப்பட்ட ரயில் நிலையத்தில் நிறுத்தம்: குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வண்டி எண் 16128), ஜூன் 18, 19, 20, 21-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 25 நிமிஷங்களும், 22, 24-ஆம் தேதிகளில் சுமாா் 15 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.
கன்னியாகுமரியிலிருந்து காலை 5.50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டிஎண் 12666) ஜூன் 20-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 30 நிமிஷங்களும், நாகா்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும் நாகா்கோவில்- மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரயில் (வண்டி எண் 16352) ஜூன்18, 21-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 45 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.
இதுபோன்று தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 7.40 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி-கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17616), ஜூன் 17-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 55 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் இயக்கப்படும். மதுரையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்படும் மதுரை- பிகானோ் அனுவரத் அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 22631), ஜூன் 18-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.
தாமதமாக இயக்கம்: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி- ஹவுரா அதிவேக விரைவு ரயில் (வண்டி எண்12664), ஜூன் 19-ஆம் தேதி சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.