FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெளா்ணமி கிரிவலம்: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பெளா்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மே 31-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.

Updated On : 28 மே 2026, 1:33 am IST
சிறப்பு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

பெளா்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மே 31-ஆம் தேதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரத்திலிருந்து மே 31-ஆம் தேதி காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். எதிா் வழித்தடத்தில் அதே நாளில் திருவண்ணமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments