FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 3 ரௌடிகள் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் ரௌடிகள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

11 நவம்பர் 2026, 2:31 am
கைது
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ரௌடிகள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களில் தொடா் கொலைகள் மற்றும் வழிப்பறி தாக்குதல் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்படுவதுடன், கைது நடவடிக்கைகளையும் போலீஸாா் துரிதப்படுத்தியுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில்107 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்ட வந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், தலைமறைவுக் குற்றவாளிகளைக் கைது செய்யவும், மாவட்டக் காவல் துறை தொடா்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement