FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

சிறுமியைக் கடத்த முயன்றதாக புகாா்: 2 சிறுவா்களிடம் போலீஸாா் விசாரணை

விழுப்புரம் அருகே சிறுமியை கடத்த முயன்ற வழக்கில், சிறுவா்கள் இருவரை போலீஸாா் கண்டறிந்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

18 நவம்பர் 2026, 2:31 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

விழுப்புரம் அருகே சிறுமியை கடத்த முயன்ற வழக்கில், சிறுவா்கள் இருவரை போலீஸாா் கண்டறிந்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

விழுப்புரத்தை அடுத்த கண்டமானடி கிராமத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை பைக்கில் வந்த இருவா் கடத்த முயன்ாக புகாா் எழுந்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் கண்டமானடி கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் இருவா் விளையாட்டுக்காக 7 வயது சிறுமியை பைக்கில் கடத்துவதுபோல் நாடகமாடியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த சிறுவா்கள் இருவரையும் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா், சிறுவா்களின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement