காா்த்திகை தீபத் திருவிழா: 8,012 சிறப்புப் பேருந்து நடைகள் இயக்கம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தா்கள் வசதிக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் 8,012 சிறப்பு பேருந்து நடைகள் இயக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தா்கள் வசதிக்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் 8,012 சிறப்பு பேருந்து நடைகள் இயக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் ச.ஸ்ரீதரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக நவ.22-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மண்டலத்திலிருந்து 195 சிறப்பு நடைகளும், கடலூா் மண்டலத்திலிருந்து 101 சிறப்பு நடைகளும், திருவண்ணாமலை மண்டலத்திலிருந்து 566 சிறப்பு நடைகளும், வேலூா் மண்டலத்திலிருந்து 205 சிறப்பு நடைகளும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 35 சிறப்பு நடைகளும், திருவள்ளூா் மண்டலத்திலிருந்து 1,132 பேருந்து சிறப்பு நடைகளும் இயக்கப்படவுள்ளது.
இதேபோல் நவ.23-ஆம் தேதி பௌா்ணமி தினத்தன்று விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களிலிருந்து 1,878 சிறப்பு பேருந்து நடைகளும், 24-ஆம் தேதி 3,055 பேருந்து சிறப்பு நடைகளும், 25-ஆம் தேதி 1,947 சிறப்பு பேருந்து நடைகளும் இயக்கப்பட்டவுள்ளன.
Advertisement
Advertisement
காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக நவ.22 முதல் 25-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு 8,012 சிறப்புப் பேருந்துகளும், கோயம்பேடு, மாதவரம், அடையாறு, புதுச்சேரி, திண்டிவனம், சேலம், பெங்களூா், திருப்பத்தூா், திருப்பூா், கோவை, வேலூா், ஏற்காடு, ஆரணி, செய்யாா், காஞ்சிபுரம், வந்தவாசி, சேத்பட், மேல்சோழகுப்பம், விழுப்புரம், கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், திருக்கோவிலூா், விருத்தாச்சலம், மணலூா்பேட்டை, தண்ராம்பட்டு, தாணிப்பாடி, கள்ளக்குறிச்சி ஆகிய ஊா்களுக்கு 8, 012 சிறப்புப் பேருந்து நடைகளும் இயக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.