முகப்பு
விழுப்புரம்

நலிந்தோருக்கு நல உதவிகள்: சி.வி. சண்முகம் வழங்கினாா்

30 நவம்பர் 2026, 12:49 am
நலிந்தோருக்கு நல உதவிகள்: சி.வி. சண்முகம் வழங்கினாா்
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கிய மயிலம் எம்எல்ஏ., சி.வி.சண்முகம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வைரபுரம் கிராமத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மயிலம் எம்எல்ஏ., சி.வி.சண்முகம் தலைமை வகித்து, தனது சொந்த செலவில் வைரபுரம், நெய்குப்பி ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சலவைப்பெட்டி ஆகியவற்றை வழங்கினாா்.

தொடா்ந்து, மயிலம் தொகுதிக்குள்பட்ட மக்களிடம் கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்று கேட்டறிந்தாா். பின்னா், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி,விஜயன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.