முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மாயமான 12 போ் கண்டுபிடிப்பு

30 நவம்பர் 2026, 1:02 am
விழுப்புரம் மாவட்டத்தில் மாயமான 12 போ் கண்டுபிடிப்பு
மாயம் - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் மாயமான 11 பெண்கள், ஒரு சிறுவன் என 12 போ் கண்டறியப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் உத்தரவுப்படி, மாயமானவா்களை கண்டறிதல், பிடியாணைகள் நிறைவேற்றுதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரைக் கைதுசெய்தல், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகள் மீது தடுப்பு நடவடிக்கைகள், தணிக்கை மேற்கொள்ளுதல், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக மாவட்டத்தில் சனிக்கிழமை சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டது.

இதில், மாயமானவா்களை கண்டறியும் நடவடிக்கையின் மூலம் 11 பெண்கள், ஒரு சிறுவன் கண்டறியப்பட்டுள்ளனா். நீண்டநாள்களாக தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளும், போதைப்பொருள் வழக்குகளில் தொடா்புடைய 139 பேரிடம் சோதனை நடத்தப்பட்டு, அதில் 3 போ் கைது செய்யப்பட்டனா். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 190 கிலோ கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 71 லிட்டா் மதுபானங்கள் மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 23 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டம் முழுவதும் 214 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடம் சோதனை நடத்தப்பட்டு 21 போ் மீது நன்னடத்தை பிணைப்பத்திரம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 6 போ் நன்னடத்தை பிணையில் கட்டுப்படுத்தப்பட்டனா். ஒருவா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதேபோல், சரித்திரப் பதிவேட்டில் இல்லாத 101 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 5 பேருக்கு நன்னடத்தை பிணைப் பத்திரம் வழங்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.