FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

2 செப்டம்பர் 2026, 7:20 am IST
தற்கொலை... - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வளவனூா், பாலாஜி நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவரது மனைவி பிருந்தா (30). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தையில்லையாம். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த பிருந்தா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், விழுப்புரம் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments