FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மூதாட்டியிடமிருந்து மூக்குத்தி திருட்டு

தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து மூக்குத்தி, பித்தளை அன்னக்கூடை ஆகியவற்றை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

5 செப்டம்பர் 2026, 2:13 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து மூக்குத்தி, பித்தளை அன்னக்கூடை ஆகியவற்றை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் அரியந்தாங்கல் சாலையைச் சோ்ந்தவா் பெ.தங்கம்மாள் (65). இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு வீட்டின் முன் உள்ள திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த இளைஞா்கள் இருவா், தங்கம்மாள் மூக்கில் அணிந்திருந்த ஒரு கிராம் மூக்குத்தி, திண்ணையில் இருந்த பித்தளை அன்னக்கூடை ஆகியவற்றை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், இந்த சம்பவத்தில் திண்டிவனத்தைச் சோ்ந்த க.இா்பான்கான் (28), மரக்காணம் வட்டம், வைடப்பாக்கத்தைச் சோ்ந்த மெ.கரீம் (25) ஆகிய இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகவுள்ள அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments