FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
எண் ஜோதிடம்

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 2

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

எண்கணித பலன்கள்
பகிர்:

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மனசாட்சிக்கும் வாக்கிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும்.  உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தேங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றமாக  காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும்.

Advertisement

Advertisement

குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

கலைத்துறையினருக்கு மன குழப்பம் நீங்கும்.  அரசியல்வாதிகள் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் ஆதிபராசக்தியை 11 முறை வலம் வர தொழில் மாற்றம் ஏற்படும். நிம்மதி கிடைக்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments