அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 3
எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எந்த சூழ்நிலையிலும் நீதி வழுவாத மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் நீங்கும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும்.
Advertisement
Advertisement
பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.
பரிகாரம்: வாராகி தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.