FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

குருசாமி

சேனல் ஃபைவ் புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் "குருசாமி'. ஐயப்பனின் மகிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை மணிமுத்து என்பவர் இயக்கியுள்ளார். "பாய்ஸ்' படத்தில் நடித்த மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார

Updated On : 20 செப்டம்பர் 2012, 2:58 pm IST
பகிர்:

சேனல் ஃபைவ் புரொடக்ஷன் தயாரித்துள்ள படம் "குருசாமி'. ஐயப்பனின் மகிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை மணிமுத்து என்பவர் இயக்கியுள்ளார். "பாய்ஸ்' படத்தில் நடித்த மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக உதயதாரா நடித்துள்ளார். டெல்லி கணேஷ், அலெக்ஸ், வடிவுக்கரசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.

""நீண்ட இடைவெளிக்குப் பின் ஐயப்ப சாமியின் மகிமையை சொல்லும் படமாக "குருசாமி' வந்துள்ளது. இதுவரை ஐயப்பன் சினிமாக்களில் வந்த திரைக்கதைகள் போல் அல்லாமல் வித்தியாசமான கருவை உருவாக்கியிருக்கிறேன். "மைனா' படத்தின் நாயகன் விதார்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கவிஞர்கள் யுகபாரதி, அண்ணாமலை உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். வசந்தமணி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார் மணிமுத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments