முகப்பு
சினிமா

ஜன நாயகன் விவகாரம்: அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!

“திரைப்படைப்பாளிகளின் பெரும் கனவை அரசு பாதுகாத்திட வேண்டும்” - மாரி செல்வராஜ்

Updated On : 11 ஏப்ரல் 2026, 6:34 pm IST
ஜன நாயகன் போஸ்டர் - படம் - எக்ஸ்
பகிர்:

ஜன நாயகன் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் உள்பட ஒட்டுமொத்த படமும் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைக் கடுமையாகக் கண்டித்து திரைத்துறை சார் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல், ரஜினி, சூர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களும் நடிகைகளும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஜன நாயகன் படக்குழுவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் தெரிவித்திருப்பதாவது :

“ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த பெரும் குற்றத்தை நிகழ்த்தியிருக்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து பெருந்தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலமாக திரைப்படைப்பாளிகளின் பெரும் கனவையும் உழைப்பையும் வாழ்வையும் அரசு பாதுகாத்திட வேண்டுமென கேட்டுகொள்கிறேன்” என்றிருக்கிறார்.

Advertisement

Advertisement

summary

Jana Nayagan issue - Mari Selvaraj voices for Cine industry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.