‘ஜெயம்’ திரைப்பட வில்லன் நடிகர் கோபிசந்தின் புது அவதாரம்...
படத்தின் டீஸரைப் பார்த்தால் ‘பணம்’ எனும் பிரதான விசயத்தை மையமாக வைத்து சுழலும் ஆக்ஷன் த்ரில்லர் வகைப் படமாகத் தோன்றுகிறது. படம் ஹிட் அடித்தால் விரைவில் தமிழுக்கும் வரலாம்.
தெலுங்கில் தற்போது நாயகனாக வலம் வந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ‘ஜெயம்’ படத்தின் மூலம் வில்லனாகத் தான் இவர் அறிமுகமானார். தெலுங்கில் ‘வர்ஷம்’ என்ற பெயரிலும், தமிழில் ‘மழை’ என்ற பெயரிலும் முறையே த்ரிஷாவும், ஸ்ரேயாவும் நடித்த படங்களில் தெலுங்கில் மெகா ஹிட்டடித்த வில்லன் கோபிசந்த். தமிழில் அவரது வேடத்தில் ‘சாம்ராட் அசோகா’ புகழ் ‘ராகுல் தேவ்’ நடித்திருப்பார்.
கோபிசந்த் தற்போது தெலுங்கில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நாயகனாக அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் கெளதம் நந்தா, இத்திரைப்படத்துக்காக கோபிசந்த் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் கெட் அப் எல்லாம் மாற்றி நடித்திருக்கிறாராம். அப்படத்தின் டீஸர் அவரது பிறந்த நாளான இன்று ஜூன் 22 ல் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் கோபிசந்துக்கு ஹன்ஷிகா, கேதரின் தெரேஸா என இரு நாயகிகள். இருவரில் கேதரின் பகட்டான பெண்ணாகவும், ஹன்ஷிகா எளிமையானவராகவும் படத்தில் தோன்றுவார்களாம்.
கெளதம் நந்தா டீஸர்...
Advertisement
Advertisement
படத்தின் டீஸரைப் பார்த்தால் ‘பணம்’ எனும் பிரதான விசயத்தை மையமாக வைத்து சுழலும் ஆக்ஷன் த்ரில்லர் வகைப் படமாகத் தோன்றுகிறது. படம் ஹிட் அடித்தால் விரைவில் தமிழுக்கும் வரலாம். பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல தெலுங்குத் திரைப்படங்கள், அவை வெளி வந்த சூட்டில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படுவதால் இந்தப் படமும் தமிழ் காணலாம். நாயகிகள் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே!
Related Article
அல்லு அரவிந்தின் ‘சம்பூர்ண ராமாயண’ த்தில், ஸ்ரீராமனாக ராம் சரண் தேஜா!
இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் பாகுபலி பிரபாஸின் கிளீன் ஷேவ் லுக்!
ராணாவின் ‘நானே ராஜா, நானே மந்திரி’ தெலுங்கு பட டீஸர்!
கால் நூற்றாண்டுக்குப் பின் ‘காலா’ வில் இணைகிறார்களா ரஜினியும், மம்மூட்டியும்?!
அக்ஷயின் பேட்மேன் VS அபிஷேக்கின் ஃபுல்லு - பாலிவுட் கலாட்டா!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.