FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

விக்ரம் பிரபு மகனுக்கு, பிரபாஸ் அனுப்பிய சர்ப்ரைஸ் கிஃப்ட்!

நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் தனது மகன் விராட்டின் பிறந்தநாளைக் கொண்டாடினார். விராட் கூட பாகுபலியின் தீவிர ரசிகன் தான்.

Updated On : 9 செப்டம்பர் 2017, 4:34 pm IST
பகிர்:

‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாகி விட்டார்கள். படத்தின் புரமோஷன் வேலைகளில் ஒன்றாகப் படக்குழுவினர் துபாயைச் சேர்ந்த குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள் தயாரிப்பாளர் ஒருவருடன் இணைந்து படத்தில் பாகுபலி பயன்படுத்திய கத்தியை பிளாஸ்டிக்கில் தயாரித்து விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டதால் படம் வெளியானதைத் தொடர்ந்து சில மாதங்களில்  குழந்தைகளுக்கான பாகுபலி டைப் வாள், தேவசேனா வீரவாள், பல்வாள்தேவனின் கதை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தன. பாகுபலி திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட குழந்தைகள் இந்தக் கத்திகளை வாங்கி தங்களையே பாகுபலியாகப் பாவித்துக் கொண்டு தற்போது விளையாட்டுக்களில் ஈடுபடுவது சென்னை போன்ற பெருநகர அபார்ட்மெண்டுகளில் வழக்கமான காட்சிகளில் ஒன்றாகி வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் தனது மகன் விராட்டின் பிறந்தநாளைக் கொண்டாடினார். விராட் கூட பாகுபலியின் தீவிர ரசிகன் தான். அதனால் தானோ என்னவோ தன் அப்பாவிடம், தனது பிறந்தநாளுக்கு பாகுபலியின் வீரவாளைப் பரிசாகக் கேட்டிருந்தார். குட்டிப்பையனின் ஆசை ஏகபோகமாய் நிறைவேறியது... விராட்டின் ஆசையை அவரது தந்தை மூலமாக அறிந்த பிரபாஸ், தனது குட்டிரசிகனுக்குப் பரிசாகத் தானே கையெழுத்திட்ட பாகுபலி வாள் ஒன்றை விராட்டுக்கு  கூரியரில் அனுப்பி வைத்தார். இப்போது விராட் மட்டுமல்ல அப்பா விக்ரம் பிரபுவும் செம ஹேப்பி! மகனுக்கு பிரபாஸ் அனுப்பிய பாகுபலி வாளைப் புகைப்படம் எடுத்து விக்ரம் பிரபு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

விக்ரம் பிரபு நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் பேரனாக இருந்த போதும் பாகுபலி 2 படத்துக்கான தமிழ் ஆடியோ லாஞ்ச் விழாவிற்கு வருகை தந்த போது பிரபாஸ் மீது தனக்கிருந்த ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி அவரைப் பாராட்டத் தயங்காதவர். தான் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு இந்தியா வந்ததும் தனது நண்பர்களுடன் சென்று ‘சத்ரபதி’ என்றொரு திரைப்படத்தை பார்த்து விட்டு வந்து அதில் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகளைக் கண்டு வியந்து போனதாக அவர் அந்த விழாவில் குறிப்பிட்டார். அப்போதிருந்தே பிரபாஸை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல தன் தாத்தா நடித்த சரித்திர காலத்து திரைப்படங்களில் நடிக்கத் தனக்கும் விருப்பம் தானென்றும் அவர் அந்த மேடையில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments