FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீதக்காதி படத்தில் முதல் 40 நிமிடங்கள் மட்டுமே வருவேன்: விடியோவில் விஜய் சேதுபதி விளக்கம்

ஏன் இந்தப் படத்தை 25-வது படமாகச் சொல்லவேண்டும், என்னுடைய படமாகச் சொல்லவேண்டும்?

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. இசை - கோவிந்த் வசந்தா. விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா, செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து சீதக்காதி படம் டிசம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது. 

விஜய் சேதுபதியின் 25-வது படமான இந்தப் படம் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அதில் அவர் கூறியதாவது:

பொதுவாக ஒரு கலைஞனுக்கு ஏற்படுகிற எண்ணத்தை கலையின் மூலமாக வெளிப்படுத்துவான் என்று சொல்வார்கள். இயக்குநர் பாலாஜி தரணிதரனின் கலைக்கான நன்றிக்கடன் தான் சீதக்காதி. இப்படிப்பட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த பாலாஜி தரணிதரனுக்கு நன்றி.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் படம் தொடங்கி முதல் 40 நிமிடங்களில்தான் நான் வருவேன். அப்புறம் ஏன் இந்தப் படத்தை 25-வது படமாகச் சொல்லவேண்டும், என்னுடைய படமாகச் சொல்லவேண்டும்? இந்தப் படம் நான் ஏற்று நடித்துள்ள ஐயா என்கிற கதாபாத்திரத்தின் ஆன்மா, கலையைப் பற்றிய படம். திரையரங்கில் பார்க்கும் உங்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் உங்களையும் என்னையும் இணைத்த கலைக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments