'பேட்மேன்' அக்ஷய் குமாரின் அடுத்த படம் என்ன தெரியுமா?
நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பேட்மேன் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது.
நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பேட்மேன் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது. மாதவிலக்கு சுகாதாரத்தை வலியுறுத்தும் விதமாக, இருபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரித்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் 'பேட்மேன்' (Padman).
பால்கி இயக்கத்தில் நடிகை டிவிங்கிள் கண்ணா தயாரித்த இப்படத்தில் அக்ஷய் குமாருடன் சோனம் கபூர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்று வெற்றியடைந்துள்ளது.
இந்நிலையில் அவரின் அடுத்த படமான ‘கோல்ட்’ (Gold) ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளிவரவிருக்கிறது. இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ரீமா கட்கி. சுதந்திர நாடாக இந்தியா முதன் முதலாக 1948-ம் ஆண்டு ஒலிப்பிக்கில் பங்கு பெற்று தங்கம் வென்ற செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். ஏர் லிஃப்ட், டாய்லெட் ஏக் ப்ரேம் கதா, பேட்மேன் எனத் தொடர்ந்து சமூக நோக்குள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அக்ஷய் குமாரை பாலிவுட் ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.