மீண்டும் இசையமைப்பாளர் ஆனார் பவதாரிணி!
மித்ர் மை ஃப்ரண்ட் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பவதாரிணி கடைசியாக 2012-ல் போரிட பழகு என்கிற படத்துக்கு
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி, மீண்டும் இசையமைப்பாளராகியுள்ளார்.
அறிமுக இயக்குநர் அசோக் தியாகராஜனின் மாயநதி என்கிற படத்தில் அபி சரவணன், வெண்பா போன்றோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் பவதாரிணி இசையமைக்க வேண்டும் என ஆர்வமாக இருந்தேன் என்று இயக்குநர் கூறியுள்ளார். கோடைக் காலத்தில் இந்தப் படம் வெளிவரவுள்ளது.
Advertisement
Advertisement
மித்ர் மை ஃப்ரண்ட் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பவதாரிணி கடைசியாக 2012-ல் போரிட பழகு என்கிற படத்துக்கு இசையமைத்தார். ஜான் விஜய் நடித்துள்ள கள்வர்கள் என்கிற படத்துக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பவதாரிணி இசையமைத்து நீண்ட நாள் கழித்து ஒரு படம் வெளிவரவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.