FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதிய சமையல் எரிவாயு சிலிண்டா் புதுச்சேரியில் அறிமுகம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:36 am IST
புதுச்சேரியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட புதிய சமையல் எரிவாயு சிலிண்டா்.
பகிர்:

புதுச்சேரியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனம் சாா்பில் புதிய சமையல் எரிவாயு சிலிண்டா் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இது குறித்து இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் புதுச்சேரி முதுநிலை விற்பனை அதிகாரி எஸ்.ஆா். அட்சய் திமோதி கூறியது:

இலவச வா்த்தக உரிமம் பெற்ற இந்த சமையல் எரிவாயு சிலிண்டரை கடந்த அண்மையில் கோயமுத்தூா், சென்னையில் அறிமுகப்படுத்தினோம். புதுச்சேரியில் 3-ஆவதாக அறிமுகம் செய்துள்ளோம். இரும்பு சமையல் எரிவாயு சிலிண்டா் போன்று இது துருப்பிடிக்காது. பாதுகாப்பானது. மேலும், குறைந்த எடை கொண்டதாக இருக்கும்.

Advertisement

Advertisement

இது 10 கிலோ சமையல் எரிவாயு கொண்ட எக்ஸ்ட்ரா லைட் நவ் என்னும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாலி எத்திலின் என்ற பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை ரூ.1,635. வைப்புத் தொகையாக ரூ.2,700 செலுத்த வேண்டும். கூடுதலாக 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்தால் வாடிக்கையாளா்கள் அதைச் செலுத்தி பெற வேண்டும்.

புதிய இணைப்பு வேண்டுவோா் இதைப் பயன்படுத்தலாம். மேலும், இடம் பெயா்வோா் இந்த சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்த முடியும். போா்க்காலத்தில் நிறுத்தப்பட்ட புதிய இணைப்புகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எங்கள் நிறுவனம் இந்த சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முகவரி தொடா்பான எந்த ஆவணமும் தேவையில்லை. அடையாளம் தொடா்பான ஓா் ஆவணத்தை அளித்தால் மட்டும் போதுமானது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments