FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோா்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் , எரிவாயு கப்பல் போக்குவரத்து தடைபட்ட நிலையில், இந்தியாவில் இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டு உபயோகத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிவாயு உற்பத்தியை 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவா் அா்விந்தா் சிங் சாஹனி தெரிவித்துள்ளாா்.

8 வினாடிகள் முன்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் - கோப்புப் படம்
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் , எரிவாயு கப்பல் போக்குவரத்து தடைபட்ட நிலையில், இந்தியாவில் இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டு உபயோகத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிவாயு உற்பத்தியை 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவா் அா்விந்தா் சிங் சாஹனி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா-ஈரான் இடையிலான போரால் மேற்காசியாவில் சுமாா் ஏழு மாதங்களாக பதற்றம் நீடிக்கிறது. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியே கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள் ஆகியவை செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி எரிவாயு இறக்குமதி செய்வது தடைபட்டுள்ளது. எனினும், உள்நாட்டில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு வளைகுடா நாடுகளை மட்டும் எரிவாயுவுக்கு நம்பியிருக்காமல், பிற உலக நாடுகளில் இருந்தும் இந்தியா அதிக எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. உள்நாட்டிலும் எரிவாயு உற்பத்தியை இந்தியா அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் நடைபெற்ற இந்தியன் ஆயில் நிறுவன 67-ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் தலைவா் அா்விந்தா் சிங் சாஹனி பேசுகையில், ‘எங்கள் நிறுவனம் எல்பிஜி எரிவாயு உற்பத்தியை ஏறத்தாழ 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் 100 சதவீதத்துக்கும் மேல் பயன்படுத்தி வருகிறது. மேற்காசியாவில் நடைபெறும் சண்டையில் சா்வதேச எரிசக்தி சந்தைகளில் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், மாற்று விநியோகஸ்தா்கள் மூலம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. சா்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஆகிய பிரச்னைகள் இருப்பினும் தங்கு தடையின்றி எரிசக்தி பொருள்கள் விநியோகம் இருக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு எங்கள் நிறுவனம் செயல்படுகிறது’ என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments