முகப்பு
செய்திகள்

கலர்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் கதிர், சூரி நடித்த சர்பத்

கதிர் நடித்த சர்பத் படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. 

Updated On : 2 ஏப்ரல் 2021, 2:58 pm IST
பகிர்:

கதிர் நடித்த சர்பத் படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. 

ஹலிதா ஷமீம் இயக்கிய ஏலே படம் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. அதற்கு முன்பு சுந்தர். சி இயக்கிய நாங்க ரொம்ப பிஸி படமும் சன் டிவியில் நேரடியாக வெளியானது. இந்த வரிசையில் மற்றொரு படமும் இணைந்துள்ளது.

கதிர், ரகஸ்யா, சூரி நடித்துள்ள படம் - சர்பத். பிரபாகரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சூப்பர் சிங்கர் அஜீஷ் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வயகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

Advertisement

Advertisement

இந்தப் படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகவுள்ளது. ஏப்ரல் 11 அன்று மாலை 4 மற்றும் இரவு 7 மணி என இருமுறை சர்பத் படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments