கமலிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசனிடம், தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
கரோனா தொற்று காரணமாக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய பின் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது உடல் நலன் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கமலின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனிடம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். அப்போது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.