தளபதி 66 படத்தில் விஜய்யின் மகளாக நடிக்கும் மகேஷ் பாபுவின் மகள் ?
தளபதி 66 படத்தில் விஜய்யின் மகள் வேடத்தில் மகேஷ் பாபுவின் மகளை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
'தளபதி 66' படத்தில் விஜய்யின் மகள் வேடத்தில் மகேஷ் பாபுவின் மகளை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
'மாஸ்டர்' பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இயக்குநர் நெல்சன் திலிப்குமார் 'டாக்டர்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | விஜய் சேதுபதியின் மகள் நடித்துள்ள 'முகிழ்' பட டீசர் வெளியானது!
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், தெலுங்குப் பட இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் பெண் குழந்தைக்கு தந்தையாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தற்போது மகேஷ் பாபுவின் மகளை விஜய்யின் மகளாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.