முகப்பு
செய்திகள்

2022-ல் இந்தியாவின் டாப் 10 'வெப் சீரிஸ்' என்னென்ன?

இந்தியாவில் 2022ஆம் ஆண்டு வெளியான வெப் சீரிஸ்களில் (வலைத் தொடர்) முதல் 10 இடங்களைப் பிடித்த தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Updated On : 14 டிசம்பர், 2022 at 3:28 PM
பகிர்:

இந்தியாவில் 2022ஆம் ஆண்டு வெளியான வெப் சீரிஸ்களில் (வலைத் தொடர்) முதல் 10 இடங்களைப் பிடித்த தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களுக்கான தரத்தை (ரேட்டிங்) நிர்ணயிக்கும் ஐஎம்டிபி நிறுவனம் இந்த பட்டியலை வழங்கியுள்ளது. 

இந்தியாவில் திரைப்படங்களுக்கு நிகராக வலைத்தொடர்களுக்காக வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சமீப காலமாக மாநில மொழிகளிலும் வலைத் தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றனர். 

Advertisement

இந்தியாஅந்தவகையில் இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான வலைத்தொடர்களில் இந்த ஆண்டு டாப் 10 இடத்தைப் பிடித்த தொடர்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. 

அதன்படி முதலிடத்தில் பஞ்சாயத் (Panchayat) தொடர் இடம் பெற்றுள்ளது. இது அமேசானில் வெளியானது. அதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் தில்லி கிரைம் (Delhi Crime) இது நெட்பிளிக்ஸில் வெளியானது.

3வது இடத்தில் ராக்கெட் பாய்ஸ் (Rocket Boys). இது சோனியில் வெளியானது. 4வது இடத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியான ஹியூமன் (Human) தொடர் இடம்பெற்றுள்ளது. 

5வது இடத்தில் வூட் செயலியில் வெளியான அப்ஹாரன் (Apharan) உள்ளது. 6வது இடத்தில் சோனியில் வெளியான குல்லாக் (Gullak), 7வது இடத்தில் என்சிஆர் நாள்கள் (NCR Days) இடம் பெற்றுள்ளன. 

8வது இடத்தில் அபே (Abhay) தொடர் உள்ளது. இது ஜீ ஓடிடி தளத்தில் வெளியானது. 9வது இடத்தில் எம் எக்ஸ் பிளேயரில் வெளியான கேம்பஸ் டைரிஸ் (Campus Diaries), 10வது இடத்தில் சோனியில் வெளியான காலேஜ் ரொமான்ஸ் (College Romance) இடம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.