நாளை (ஜன.21) ஓடிடியில் வெளியாகிறது ‘ஷ்யாம் சிங்கா ராய்’
நடிகர்கள் நானி- சாய் பல்லவி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் நாளை (ஜனவரி 21) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர்கள் நானி- சாய் பல்லவி நடிப்பில் உருவான ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் நாளை (ஜனவரி 21) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர்கள் நானி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடித்து கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான திரைப்படம் ஷ்யாம் சிங்கா ராய். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | கோவா பாஜக வேட்பாளர்கள்: 4 பேர் மீது குற்றவியல் வழக்கு
Advertisement
Advertisement
வசூல்ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தை ராகுல் சங்ரித்யான் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்தத் திரைப்படம் நாளை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே ஆவலைக் கிளப்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.