முத்தையா இயக்கத்தில் ஆர்யா- சித்தி இத்னானி!
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.
விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் முத்தையா ஆர்யாவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி நடிக்க உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு பூஜை இன்று (அக்.9) நடைபெற்றது. படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.