முகப்பு
செய்திகள்

'பொன்னியின் செல்வன்': மணிரத்னம் உயர்ந்து நிற்கிறார் - சொன்னது யார் தெரியுமா ?

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து பிரபலத்தின் கருத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.  

Updated On : 19 அக்டோபர், 2022 at 7:00 PM
பகிர்:

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து பிரபலத்தின் கருத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.  

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ''ஒரு கதையைப் பெரிய திரையில் பிரம்மாண்டமாக காட்டியதற்கு பெருமைப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் மக்களை தங்களது சொந்த வரலாற்றை திரையில் காட்டியிருக்கிறது. இந்தப் படம் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. மணிரத்னம் உயர்ந்து நிற்கிறார்.'' என்று குறிப்பிட்டுள்ளார். 

மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, திருடா திருடா, அலைபாயுதே, ஓகே கண்மணி என மணிரத்னம் - பி.சி.ஸ்ரீராம் இணைந்து தமிழ் சினிமாவில் புது திரைமொழியில் கதை சொல்லி கவனம் ஈர்த்தார்கள்.

பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அளவில் அதிகம் வசூலித்த படங்களில் பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.