மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஆர்ஆர்ஆர்' பட நாட்டுக் கூத்து விடியோ பாடல் இதோ
ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து நாட்டுக் கூத்து விடியோ பாடல் வெளியானது.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்டோர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திர போராட்ட பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்க, செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இதையும் படிக்க | விஜய்யின் 'தளபதி 66'-ல் ராஷ்மிகாவுக்கு முன் நடிக்கவிருந்தது இவரா ? மாற்றத்துக்கு காரணம் ?
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நாட்டுக் கூத்து பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் நாட்டுக் கூத்து விடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.