முகப்பு
செய்திகள்

’பொன்னியின் செல்வன் - 2’ பணிகள் தீவிரம்

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழுவினர் தீவிரம் காட்டி  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 20 டிசம்பர் 2022, 11:35 am IST
பகிர்:

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழுவினர் தீவிரம் காட்டி  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.500 கோடி அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

Advertisement

Advertisement

இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம் 3வது இடத்தில் பாகுபலி 2, 4வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், 5வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை அடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.