’நம்பவே முடியலை...’ டாம் க்ரூஸ் குறித்து நடிகர் சூர்யா
மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்த டாம் க்ரூஸின் விடியோவைக் கண்டு கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்த டாம் க்ரூஸின் விடியோவைக் கண்டு கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்(60) தனக்கான ஸ்டண்ட் காட்சிகளில் தானே நடிக்கக் கூடியவர்.
இவர் நடிப்பில் வெளியான 'டாப் கன்’, ‘மிஷன் இம்பாசிபிள்’ உள்ளிட்ட படங்களில் சில ஆபத்தான சண்டைக் காட்சிகளில் மாற்று (டூப்) இல்லாமல் இவரே நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பாரதிராஜாவுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன்: அதிதி பாலன்
இந்நிலையில், டாம் க்ருஸ் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக இருசக்கர வாகனத்துடன் மலையிலிருந்து கீழே குதிக்கும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சியில் நடித்து அதன் மேக்கிங் விடியோவைப் பகிர்ந்திருந்தார். அதனைக் கண்ட பலரும் ஆச்சரியத்தில் டாம் க்ரூஸைப் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சூர்யாவும் அந்த விடியோவைப் பகிர்ந்து ‘ஆஹா...நம்பவே முடியலை’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.